கொழும்பு விஸ்டம் முன்பள்ளி பாடசாலையின் விளையாட்டுப் போட்டிகள்

Date:

கொழும்பு விஸ்டம் முன்பள்ளி விளையாட்டுப் போட்டிகள் கடந்த  09 ஆம் திகதி விமர்சையாக நடைபெற்றது.


இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக அமேசான் கல்லூரியின் முகாமையாளரும் பேராதனை பல்கலைக்கழக உளவியல் துறை விரிவுரையாளருமான (visiting lecturer) இல்ஹாம் மரிக்கார் கலந்து சிறப்பித்தார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக குழந்தைகள் உரிமை மேம்பாட்டு அதிகாரி திருமதி. துஷாரா விக்கிரமசிங்க மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைகுழுவின் மதிப்பீட்டாளர் பிம்பா ஜீவரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறுவர்களை விளையாட்டுப் பயிற்சிகளில் ஊக்குவிப்பதன் மூலம் போதைப்பொருள் பாவனை மற்றும் தகாத செயல்பாடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இல்ஹாம் மரிக்கார் கருத்து தெரிவித்தார்.

மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற முன்பள்ளி சிறார்களுக்கான பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...