சர்வதேச பிரதிபலிப்பை மேம்படுத்துவதற்கான மூலோபாய தொடர்பாடல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

Date:

இலங்கையின் தேசிய அபிலாசைகள் மற்றும் சர்வதேசப் பிரதிபலிப்பை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த மூலோபாய தொடர்பாடல் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் (14) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரினால் இந்த வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் உரிய வெளிநாட்டுக்கு கொள்கையினை உணர்வுபூர்வமாக நிர்வகிப்பதற்கும், உலகளாவிய மற்றும் பிராந்திய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையின் சர்வதேச பிரதிபலிப்பை மேம்படுத்தவும் மூலோபாய தகவல்தொடர்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...