‘நளீமியின் இதயத்திலிருந்து’ வாழ்வியல் பேச்சுத் தொடரின் தொடக்க அமர்வில் உள்நாட்டு இறைவரி பிரதி ஆணையாளர் நாயகம் (ஓய்வு) அஷ்.மிப்லி

Date:

‘From the Heart of a Naleemi’ வாழ்வியல் பேச்சுத் தொடரின் ஆரம்ப அமர்வு, ஆகஸ்ட் 29, 2023 செவ்வாய்கிழமை பேருவளை ஜாமிஆ நளீமியா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நளீமியா இஸ்லாமிய கற்கைகள் நிறுவகத்தின் தலைவர் உஸ்தாத் அஷ்-ஷேக் ஏ.சி. அகார் மொஹமட் ஆரம்ப உரையுடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார், தற்போதைய மாணவர்களின் இலட்சியங்களை வளர்ப்பதில் வாழ்வியல் உரைகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

பேச்சுத் தொடரின் முதலாவது பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றிய உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் அஷ். என்.எம்.எம். மிப்லி (நளீமி) M.A. தனது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்துகொண்டு நளீமியாவின் முன்னாள் மாணவருக்குரிய மிடுக்கை வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் நளீமியாவின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்கள், ராபிதா அந்நளீமிய்யீனின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தற்போதைய மாணவர்களுக்கு மதிப்பிற்குரிய தமது முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள் மற்றும் சாதனைகளிலிருந்து உத்வேகம் பெறும் வகையில் இந்த வாழ்வியல்  பேச்சுத் தொடர் அமைந்துள்ளதோடு தலைமுறை இடைவெளிகளைக் குறைப்பதற்கான தனித்துவமான நடவடிக்கையாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. ‘ஒரு நளீமியின் இதயத்திலிருந்து’வாழ்வியல் பேச்சுத் தொடர்  மூலம், இந்த நிறுவனம் காலத்தை வென்ற இலட்சியத்தையும் கற்றல் உணர்வையும்  வளர்க்க முனைகிறது.

இந்த நிகழ்ச்சி நளீமியாவின் புறக்கிருத்திச் செயற்பாடுகள் பிரிவினால் ராபிதா அந்நளீமிய்யீன் (நளீமியா நிறுவனத்தின் பழைய மாணவர் சங்கம்) ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...