நாடளாவிய ரீதியில் முழு நேர நீர் விநியோகத்தில் சிக்கல்!

Date:

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரை வழங்குவது சவாலாக மாறியுள்ளது.

நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 344 நீர் விநியோக நடவடிக்கைகளில் 20 முழு நேர நீர் விநியோக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு நேர அட்டவனை (Shift) அடிப்படையில் நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி,குருநாகல், ஹெட்டிபொல, நிக்கவெரடிய, வாரியபொல, மாத்தறை – ஊருபொக்க ஹம்பாந்தோட்டை – பெலிஅத்த, முருத்தவெல, தங்கல்ல, வலஸ்முல்ல, அக்கறைப்பற்று, பொத்துவில், திருக்கோயில், மொனராகலை, பிபிலை, அம்புகஸ்துவ, பண்டாரவளை, ஹல்தும்முல்ல, போகஹாகும்புர, கந்தேகெடிய, சீலதெடிய, அமுனுகெலே, கெப்பெட்டிபொல ஆகிய பகுதிகளில் நீர் வழங்கல் அமைப்புகளில் கண்காணிப்பு முறையின் கீழ் கட்டுப்பாடுகளுடன் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினையால் இதுவரை நாட்டில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ், கட்டுப்பாட்டில் உள்ள 73 மஹாவரி வர்த்தக நிறுவனங்களில் 42 நிறுவனங்களின் செயற்றிறன் நீர் கொள்ளளவு 30% வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பாவிக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களுக்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...