பாகிஸ்தான் தேர்வுக் குழுத் தலைவராகிறார் இன்சமாம் உல் ஹக்

Date:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக அவ்வணியின் முன்னாள் தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் 2ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக பணியாற்றிய ஹாரூன் ரஷித் கடந்த மாதம் அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து அந்தப் பதவிக்கு பாகிஸ்தான் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக்கின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக்குழுவானது புதிய தேசிய தேர்வுக் குழுவை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியது.

இதில் முன்னாள் தலைவரும், முன்னாள் தேர்வுக் குழுவின் தலைவருமான இன்சமாம் உல் ஹக்கை மீண்டும் தலைமை தேர்வாளராக நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.

53 வயதான இன்சமாம் இதற்கு முன்பு கடந்த 2016 முதல் 2019 வரையில் பாகிஸ்தான் அணியின் தலைமைத் தேர்வாளராக பணியாற்றி இருந்தார்.

இன்சமாம், 1991 முதல் 2007 வரையில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர். மொத்தமாக 499 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 20,580 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 35 சதங்கள் அடங்கும். 2003 முதல் 2007 வரையில் பாகிஸ்தான் அணியின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் செயலாளர் ஹசன் சீமா ஆகியோரும் புதிய தேர்வுக் குழுவின் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் நிலை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...