முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான இறுதி அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது!

Date:

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான இறுதி அறிக்கை நீதி அமைச்சில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்ட சுமார் 27 இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், சமூக சிவில் தலைவர்கள் மற்றும் உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் 18 பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே குறித்த ஆவணங்கள் அமைந்திருந்தன.

இதுபற்றி முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அவர்கள் நீதி அமைச்சருடனான சந்திப்பில் கூறியதாவது,

இந்தத் திருத்தத்தையே நாட்டின் முழு முஸ்லிம் சமூகமும் ஏற்றுள்ளது. தேவைப்பட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஒரு மில்லியன் கையெழுத்துக்களைப் பெற்றுத் தர முடியும்.

மேலும்  முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் இந்நாட்டு முஸ்லிம் மக்களினது உரிமையாகும். அது இம்மக்களின் விருப்பங்களுக்கு உட்பட்டவாரே திருத்தப்பட வேண்டும். அதனை எல்லோரும் விரும்பும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் திருத்தி அமைத்துள்ளது.

எனவே அதனை முஸ்லிம் அல்லாதவர்கள் பலரும் திருத்தி அமைக்க நினைப்பது ஆச்சரியமாக உள்ளது. எனவே இந்த மும்மொழிவை தாங்கள் நீதி அமைச்சராக இருக்கும் காலத்திலேயே நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் சட்டத்தரணி நுஸ்ரா சறூக் கூறுகையில்,

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது முஸ்லிம் சமூகத்தின் சட்டமாகும். அதனை முஸ்லிம்கள் தான் கையாள வேண்டும் எனவும் அது பற்றிய திருத்தத்தில் எமது இந்தக் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் ஒரு சிலர் மட்டுமே.

மேலும் பெண் காதி நீதிபதிகள்  வெளிநாடுகளில் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதனை எமக்கு ஆதாரமாக எடுக்க முடியாது. நாம் ஷரீஆவை திருக்குர்ஆனையும் ஹதீஸையும் தான் பின்பற்றி இச்சட்டத்தை அமைக்கவும் மற்றும் திருத்தம் செய்யவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...