வறட்சி நிலை நீங்க இஸ்திஸ்கா தொழுது துஆக்களில் ஈடுபடுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

Date:

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உலமா சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தண்ணீர் நமக்கு அத்தியவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது அதன் போதாமை காரணமாக பயிர்கள் இறந்து, கால்நடைகள் உட்பட 7ஏனைய உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நீர்மின் உற்பத்தி கேள்விக்குறியாகி உள்ளது. விவசாய நடவடிக்கைகள் போதுமான நீர் இன்றி தடைப்பட்டிருக்கின்றன.

இதுபோன்ற அசாதாரண நிலைமைகளில் அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபிவழியாகும். அதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.

எனவே எமது பாவங்களுக்காக நாம் தௌபா செய்வதுடன் நாடளாவிய ரீதியில் வறட்சி நீங்கி, மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை வேண்டி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.


‘உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன் என்றும் கூறினேன்.

(அவ்வாறு செய்வீர்களாயின் தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் குழந்தைகளையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.’ (ஸுறா நூஹ்: 10 – 12)

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...