வறட்சியால் இலங்கையில் தொடர்ந்தும் குறையும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம்

Date:

நிலவும் வறட்சியான காலநிலையால் 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 2.5 வீதமாக குறைந்துள்ளதுடன், சமனலவாவியில் இருந்து நீரை விநியோகிக்கும் உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் 2.8 வீதமாக உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியால் 15 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 75,287 பேர் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் சுதர்ஷனி விதானப்பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நிலவும் வறட்சியால் மனிதர்கள் மட்டும் இன்றி அனைத்து வனவிலங்குகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...