விஐபிக்களின் பாதுகாப்புக்காக மட்டும் 7000க்கும் அதிகமான பொலிஸார் கடமையில் !

Date:

வி.ஐ.பிக்களின் பாதுகாப்புக்காக 7,693 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் ஜகத் குமார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்களில் 563 பேர் அமைச்சர்களுக்கும் 1811 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புக்காக பணிபுரிகின்றனர்.

மேலும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத உயரதிகாரிகளுக்காக இரண்டாயிரத்து நூற்று எழுபத்தாறு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஆளுநர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பல பிரிவுகள் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத உயரடுக்கு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...