ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்துவதில் சீனா விதித்த புதிய கட்டுப்பாடு!

Date:

சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளது.

குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்துவதால் தூக்கமிழப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாவதாக கூறப்படும் நிலையில், சீன அரசாங்கம் ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்பாடு சார்ந்து புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பான வரைவை சீன அரசாங்கம் கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு மேல் ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்தக் கூடாது.

8 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 1 மணி நேரமும் 8 வயதுக்கு உட்பட்டவர்கள் 40 நிமிடங்கள் மட்டுமே ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்த வேண்டும்.

மேலும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையில் ஸ்மார்ட் கைத்தொலைபேசி இணைய சேவையை பயன்படுத்தக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பாக மக்கள் கருத்துத் தெரிவிக்க செப்டம்பர் 2 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு, இந்த விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்களுக்கு மேல் இணைய கேம் விளையாடக் கூடாது என 2019 ஆம் ஆண்டு சீன அரசாங்கம் கட்டுப்பாடு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...