தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய நெருக்கடியாக இருந்த நிலை, இன்று சாதாரண நிலைக்கு வந்துள்ளது. நமது அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நமது இருப்பு அளவு வலுப்பெற்று வருகிறது.
கிட்டத்தட்ட 600 பொருட்களுக்கான இறக்குமதி வரம்புகளை நாங்கள் பராமரித்து வருகிறோம். அங்கிருந்து , அடுத்த மாதத்திற்குள் இதற்கு தீர்வு கிடைக்கும். வாகனங்கள் தவிர்த்து அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் வெளியிடும் திறன் எங்களிடம் உள்ளது. அடுத்த மாதம் வெளியிடப்படும்.
இதேவேளை, இதுவரை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வரி வருமானத்தில் சுங்கத் திணைக்களம் 630 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.