இறக்குமதி தடைகள் விரைவில் நீக்கப்படும்: பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க!

Date:

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதி தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனவே ,எதிர்பார்த்த அளவு பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்ததன் பின்னர், வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை திறந்த பொருளாதார கொள்கைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதால் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் அந்நிய செலாவணியின் கையிருப்பை கருத்திற்கொண்டே, இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

தற்போதைய நிலைமையில் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை.

எதிர்வரும் காலப்பகுதியில் அந்நிய செலாவணியின் கையிருப்பின் அடிப்படையில் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...