சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் தடைவிதிக்கப்பட்டிருந்த இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான உத்தியோகபூர்வ தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.
இந்த தேர்தல் இன்று பிற்பகல் விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதுடன், 67 கழகங்களின் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றவுள்ளனர்.
இதில் அநுராதபுர கழகத்தின் தலைவர் தக்ஷித சுமதிபாலவும், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமரும் போட்டியிடவுள்ளனர்.
குறித்த தேர்தலை கண்காணிப்பதற்காக சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் உறுப்பு நாடுகளின் உள் விவகாரங்களுக்குப் பொறுப்பான துறையின் பணிப்பாளரும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் நான்கு பிரதிநிதிகள் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.