உலகக்கோப்பை தொடருக்கான பாடல் வெளியானது!

Date:

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் ஒக்டோபர் ஆம் திகதி  தொடங்குகிறது.

இந்த தொடரில் இலங்கை,  இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை இன்று ஐ.சி.சி வெளியிட உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த பாடல் தற்போது வெளியானது. இந்த பாடலுக்கு ‘தில் ஜாஷ்ன் போலே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.

இந்த பாடலில் பொலிவுட் நடிகர் ரண்வீர் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...