கம்பஹா மாவட்ட அதிபர்களுக்கான வலுவூட்டல் கருத்தரங்கு

Date:

கம்பஹா மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் கல்வித்தர மேம்பாட்டுக்கான மூலோபாயங்களை ஆராயும் அதிபர்களுக்கான மூன்று நாள் வதிதிவிட கருத்தரங்கு
இம்மாத இறுதியில் மல்வானையில் நடைபெறவுள்ளது.

மல்வானை அல் முஹ்சீன் விஞ்ஞானக் கல்லூரி, கம்பஹா மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தும் இவ் ஆய்வு கருத்தரங்கு செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மல்வானை மாபிடிக்கம seylan Estate பங்களாவில் நடைபெறவுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் முஸ்லிம் பாடசாலைகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஆராய்ந்து குறிப்பிட்ட வளர்ச்சிக்கான இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராயப்படுவதுடன் மாவட்டத்திலுள்ள அதிபர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

பேராசிரியர் என். கபூர்தீன்  அங்குரார்ப்பண வைபவத்தில் ஆரம்ப உரை நிகழ்த்த இருப்பதுடன் சிறப்புப் பேச்சாளர்களாக களனி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ. தௌசீர் மினுவாங்கொட வலயக் கல்விப்பாணிப்பாளர் எம்.ஜே.எம். றிஸ்வியும்  கொழும்புப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம். சாபிர் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த ஆய்வுக் கருத்தரங்கில் தேசியக்கல்வி நிறுவனத்தின் செயற்றிட்ட அதிகாரி எம்.ஜே.எம். ஸனீர், சப்ரகமுவ மாகாண கல்வித்திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அன்ஸாப் தௌஸ் மற்றும் கணனித்துறை விரிவுரையாளர் அமீர் மொஹமத் ராஜா ஆகியோர் வளவாளர்களாகவும் வருகைத் தரவுள்ளனர்.

மேலும் இக்கருத்தரங்கின் இணைப்பாளராக மினுவாங்கொட அல்அமான் அதிபர் எம்.டி.எம். ஆதீம் செயல்பட இருப்பதாகவும் 5 அமர்வுகளை உள்ளடக்கியதாக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அல்முஹ்சீன் விஞ்ஞானக் கல்லூரியின் முதல்வர் எம்.எம்.ஏ. இஸ்மாயில் ஹாஜியார் ‘NewsNow’ க்குத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

நாடு முழுவதும் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை நிலைகொண்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...