கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

Date:

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடிய பின்னர் உற்பத்தி செலவை கணக்கிட்டு கொடுத்துள்ளோம். கஅத்துடன் சில உடன்பாடுகளுக்கு வந்துள்ளோம். தற்போது நாட்டில் இறைச்சி தட்டுப்பாடு இல்லை. சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் அதிகபட்ச திறனில் உற்பத்தி செய்கின்றனர். அதன்படி எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படாது.

எங்களுக்கு உற்பத்தியை தொடர அரசு அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளதன் காரணமாக டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி திறன் அதிகரித்து உபரியாக இருக்கும் என நம்புகிறோம் என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் காரணமாக கோழி இறைச்சியின் விலை 1,100 ரூபாவை எட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...