டெங்கு நோயால் பங்களாதேஷில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

Date:

பங்களாதேஷில் டெங்கு காய்ச்சலினால் சுமார் 1000 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இந்நிலைமை மேலும் அதிகரிக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மைய தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவ மழைக் காரணமாக டெங்கு நுளம்புகளை உருவாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நோயைக் கட்டுப்படுத்த அந்நாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

இதன் காரணமாக அந்நாட்டு வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷில் பருவகால நோயாக டெங்கு நோய் காணப்பட்டாலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பமான மற்றும் ஈரலிப்பான பருவங்கள் காரணமாக இது அடிக்கடி ஏற்படும் நோயாக மாறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...