திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

Date:

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளிப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதனை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்ததுடன், பலரது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற்று புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் முதல் வாசிப்பின் பின்னர் அதற்கு எதிராக ஆட்சேபனைகள் இருப்பின் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய முடியும் என சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...