-எம்.யூ.எம்.சனூன்
இருதய நோய் தொடர்பாக சமூகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் இலவச செயலமர்வொன்று நேற்று (20) புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள இஸ்மாயில் தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இஸ்மாயில் தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் உடற்கூற்று விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் எம்.ஐ.எம்.ரிபாத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதான வளவாளராக இருதய சத்திர சிகிச்சை விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் எம்.ஏ.நௌஷாத் கலந்து கொண்டார்.
“மூட நம்பிக்கைகளை தவிர்த்து அறிவியலோடு பயணிப்போம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் இருதய நோய் தொடர்பான விளங்கங்கள், வருமுன் காப்போம் செயற்திட்டங்கள், உணவு பழக்க வழக்கங்கள் தொடர்பாகவும் இங்கு தெளிவு படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் இளம் வைத்தியர்களான டாக்டர் முஹம்மது முன்சிப், டாக்டர் சஹாரி ரிஸ்வி, டாக்டர் சம்லத் ஹலீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.