மத்திய மாகாண பாடசாலை மாணவர்களிடையே கல்வி அறிவு குறைவடைந்துள்ளது!

Date:

மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 3 வீதமானவர்களே சிறந்த கல்வியறிவைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தோற்றுப் பரவிய காலப்பகுதியில் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கையில் ஏற்பட்ட தடைகளே இந்த நிலைமைக்கு காரணம் என மத்திய மாகாண கல்விச் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் தரம் 4 மற்றும் 5 மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டத்திற்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஆதரவைப் பெறவுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆரம்பப் பிரிவு மாத்திரமன்றி 6 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரையான மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அமுலில் உள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...