மனிதப் பாவனைக்குதவாத ஒரு இலட்சம் கிலோ கழிவுத் தேயிலை மீட்பு!

Date:

கம்பளையில் மனித பாவனைக்கு உதவாத ஒரு இலட்சம் கிலோ கழிவுத் தேயிலை எத்கல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கம்பளை உலப்பனை பொருளாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் அனுமதிப்பத்திரமின்றி இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் கிலோவுக்கும் அதிகமான மனித பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலைகளை எத்கல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

எத்கல பொலிஸார் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றினை சோதனையிட்டபோது அதற்குள் அனுமதிப்பத்திரமின்றி ஹட்டன் டிக்கோயா பிரதேசத்திலிருந்து உலப்பனை பகுதிக்கு கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பத்தாயிரத்து 500 கிலோகிராம் கழிவுத் தேயிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, லொறியின் சாரதியை கைதுசெய்து மேற்கொண்ட விசாரணையின்போதே மேற்குறிப்பிட்ட களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் நேற்று (25) மாலை தேயிலை சபையின் கம்பளை கிளை அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸார் குறித்த களஞ்சியசாலையினை சோதனையிட்டதுடன், இரசாயன பரிசோதனைகளுக்காக தேயிலை மாதிரிகளையும் சேகரித்தனர் .

பொலிஸாரின் விசாரணையின்போது குறித்த களஞ்சியசாலையின் உரிமையாளர் சமூகமளிக்காததால் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...