‘மரண அடி வாங்கினாலும் எழுவோம்’; தசுனின் தவறான முடிவே இலங்கைக்கு தோல்வி!

Date:

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக எடுத்த முடிவை சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

“நேற்றைய காலநிலை அவதானித்து அவர் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றதால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்க வேண்டும்.

மேகமூட்டமான வானிலை காரணமாக முதல் இன்னிங்ஸில் பந்து அதிகமாக ஸ்விங் ஆவதாக இருக்கும்.

ஆனால், தலைவர் தசுன் ஷானக நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை  தெரிவுசெய்த முடிவானது என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

இதன் காரணமாகவே இலங்கை கடுமையான சூழலை எதிர்கொண்டதாகவும் குறுகிய ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது“ எனவும் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையானது சர்வதேச நகைச்சுவையாக மாறுவதற்கு முன்னர், தசுன் ஷனக்க அணித்தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நேரம் இது என இலங்கையின் பிரபல பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தசுன் ஷனக கடந்த பல மாதங்களாக துடுப்பாட்டத்தில் மிகவும் பின்னிலை அடைந்து வருவதாகவும், அவரது சராசரி இலங்கையின் 10 ஆவது துடுப்பாட்ட வீரர் மகேஷ் தீக்ஷனாவை விடவும் குறைவானது என்றும் குற்றச்சாட்டை குறித்த பத்திரிகை சுமத்தியுள்ளது.

இதேவேளை, இலங்கையின் பல முன்னணி வீரர்களும் தசுன் ஷானக்கவின் தீர்மானம் குறித்து கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...