மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டும்: முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை

Date:

தேசிய பட்டியல் மூலம் தான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கட்சியின் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனடிப்படையில், தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவை பதவி விலக செய்து, அந்த பதவியை தனக்கு வழங்குமாறு அவர், கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்குவது குறித்து மயந்த திஸாநாயக்க இதுவரை விருப்பத்தை வெளியிடவில்லை ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மயந்த திஸாநாயக்க, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்க தயங்கி வருகிறார்.

மயந்த திஸாநாயக்க தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படும் போது இரண்டு ஆண்டு காலத்திற்கு மாத்திரமே நியமிக்கப்படுவதாக கூறியே நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...