சுமார் 20 ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஏற்கனவே பயன்படுத்திய ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயில் எஞ்ஜின்கள் இலங்கைக்கு பொருத்தமானதாக உள்ளதா என்பதைக் கண்டறிய தொழில்நுட்பக் குழுவொன்றை விரைவில் இந்தியாவிற்கு அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்தே குறித்த என்ஜின்களை இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.