நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மலையுடனான காலநிலை நிலவி வருகிறது.
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களில் மலையுடனான காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மலை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவுகளிலும் மேற்கு, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.