பிரபல கோடீஸ்வரர் முகமது அல் ஃபயீத் தனது 94வது வயதில் காலமானார்.
எகிப்தில் கடந்த 1929ஆம் ஆண்டு பிறந்தவர் முகமது அல் ஃபயீத். இத்தாலி மற்றும் மத்திய கிழக்கில் தொழில் செய்த அவர் 1960 களில் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்.
அங்கு மிகப்பெரிய கோடீஸ்வர தொழிலதிபராக உயர்ந்தார். இந்த நிலையில் 94 வயதான முகமது லண்டனில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று அவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளன.முகமது உலகளவில் அனைவருக்கும் தெரிந்த நபராக மாற மற்றொரு காரணம் உண்டு.
ஏனெனில், இவரின் மகன் தோதி அல் ஃபயத், பிரித்தானிய இளவரசி டயானாவும் கார் விபத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி உயிரிழந்தனர்.
டயானாவும், தோதியும் காதலித்து வந்த நிலையிலேயே இந்த சம்பவம் நடந்தது. அந்த நேரத்தில் முகமது கூறுகையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரான இளவரசர் பிலிப்பின் சூழ்ச்சித் திட்டத்தில் தான் தோதியும் டயானாவும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
ஏனெனில் டயானா ஒரு எகிப்தியருடன் டேட்டிங் செய்வது பிடிக்காததால் அரச குடும்பம் விபத்துக்கு ஏற்பாடு செய்ததாக அவர் நம்பினார்.
டயானா கர்ப்பமாக இருந்ததாகவும், தோதியை திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டதாகவும், இளவரசி இஸ்லாமியரை திருமணம் செய்வதை அரச குடும்பத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் முகமது அல்-ஃபயத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.