ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் பூரண பங்கேற்புடனும் சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான விசாரணையை ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வின் ஆரம்ப அமர்வில் நேற்று (11) உரையாற்றிய போதே பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷிப் இதனைத் தெரிவித்தார்.
மனித உரிமை மீறல்கள் மட்டுமன்றி ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பிலும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களின்படி விசாரணைகளையும் வழக்குகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த உயர்ஸ்தானிகரின் அறிக்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக அவர் கூறினார்.