மருந்துகளை விநியோகிக்க உலகின் முதல் தானியங்கி இயந்திரத்தை வெற்றிகரமாக சவூதி அரேபியா அமைத்துள்ளது.
தொழில்நுட்பத் துறையில் சவூதி அரேபியா நிகழ்த்திய தொடர் சாதனைப் பட்டியலில் இந்த அதி நவீன கண்டுபிடிப்பும் இணைகிறது.
உலக மக்களுக்கான ஒரு புது அனுபவமாக அமைகின்ற இந்த அமைப்பானது மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை எளிதாக்கும் வகையில், நோயாளிகள் மருத்துவமனையை நாடுவதன் அவசியமின்றி தானியங்கி முறையில் மருந்துகளை வழங்குகிறது.
இந்த இயந்திரம் மருந்துகளில் பரிந்துரைக்கப்பட்ட பார்கோட் (Barcode), பயனாளிகள் பயன்படுத்துவதற்கான தொடர்புத் திரை, ரோபோக்களை பயன்படுத்திய ஒரு சிறப்பு இயக்க முறைமை மற்றும் மருந்துச் சீட்டின் தயார்நிலையை பயனாளிக்குத் தெரிவிப்பதற்கான செய்தித்தளம் போன்றவற்றை கையாளும் பணி அமைப்பைக் கொண்டுள்ளது.
24 மணிநேர சேவையை வழங்கும் இந்த இயந்திரம் 102 – 700 மருந்து வகைகளை சேமிக்கும் திறன் கொண்டது.
ஒவ்வொரு மருந்து வகைகளுக்கும் ஏற்றாற்போல் அவற்றை சேதம் மற்றும் திருட்டிலிருந்து பாதுகாப்பதற்கான உயர் தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டு இவ்வியந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.