உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்வதால் ரூ.1 பில்லியன் இழப்பு!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான அண்மைய தீர்மானமானது ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்புக்கு வழிவகுக்கும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாட்டின் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கவலை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான தீர்மானத்தினால் ஏற்பட்ட நிதி இழப்புக்கு யார் பொறுப்புக் கூறுவது என ஹெட்டியாராச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார் .

மேலும், 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தயாரிப்பில் இலங்கை தேர்தல் ஆணையம் ஏற்கனவே கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுவதால், வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், தேர்தலுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஆதாரங்களும் வீணடிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார் .

வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான தீர்மானம் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் செப்டம்பர் 20 ஆம் திகதி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Popular

More like this
Related

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...