எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை IMF கடன் மோசமாக்கும்!

Date:

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக்கும் என 45 வீதமான இலங்கையர்கள் நம்புவதாக ‘வெரிட்டி ரிசர்ச்’ அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இலங்கையின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என இலங்கை மக்களில் 28 வீதமானவர்கள் மாத்திரமே நம்புவதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கணக்கெடுப்புக்காக 1,008 அனுபவசாளிகளின் மாதிரியை ‘வெரைட்டி ரிசர்ச்’ தேர்ந்தெடுத்துள்ளது.

இலங்கையில் செயற்படும் சர்வதேச நாணய நிதியத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை தற்பொழுதும் எதிர்காலத்திலும் எவ்வாறு பாதிக்கும் என மாதிரி கேள்வியும் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிக்க 5 பதில்கள் மாதிரி பதில்களும் கொடுக்கப்பட்டது.

1008 பேர் அளித்த பதில்களின்படி கணக்கெடுப்பின் முடிவுகள் தயாரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...