பதுளை பொது வைத்தியசாலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 1883 பிரேத பரிசோதனைகளில் 770 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
என்ஜியோகிராம் இயந்திரம் இல்லாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஊவா மாகாணத்திலுள்ள 1.5 மில்லியன் மக்கள் இந்த சேவையினை பெற்றுக்கொள்வதாயின் கண்டி மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நாளொன்றுக்கு பதிவாகும் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக ஆதரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளொன்றுக்கு சுமார் 170 இருதய நோயாளர்கள் பதிவு செய்யப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் நிபுணர் கோத்தாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.