ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாபதி உரையாற்றுவார்

Date:

அமெரிக்காவில் இம்மாத நடுப்பகுதியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள பேச்சாளர் பட்டியலின்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவுள்ளார்.

இந்த பொதுச் சபைக்கூட்டத் தொடரில் உலகத் தலைவர்களும், இளம் தலைவர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இம்முறை பொது சபைக் கூட்டம் “நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல்“ என்ற கருத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...