கடனை செலுத்தி விட்டீர்கள்:இலங்கை பொருளாதாரத்தில் முன்னேற்றம் தெரிகிறது- பங்களாதேஷ் பிரதமர்

Date:

 பங்களதேஷிடமிருந்து இலங்கை பெற்ற கடனை குறுகிய காலத்துக்குள் மீளச் செலுத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (19) நியூயோர்க்கில் இடம்பெற்றது.இதன்போதே மேற்கண்டவாறு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இரு நாட்டு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.

மேலும், கடந்த காலத்தில் பங்களதேஷிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனை குறுகிய காலத்துக்குள் மீளச் செலுத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த பங்களாதேஷ் பிரதமர், அந்த கடனை செலுத்த முடிந்துள்ளதன் ஊடாக இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள முன்னேற்றம் தெரிகிறது என்பதோடு, அதனை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்வதன் ஊடாக இலங்கை சுமூகமான நிலைமையை அடைந்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

கடந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு பங்களாதேஷ் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவிற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பங்களாதேஷ் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதன்போது, பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கிடைத்து வரும் ஆதரவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, பங்களாதேஷின் பெருந்தன்மைக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

முன்னதாக பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த சந்தர்ப்பத்தை இழந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....