கிழக்கு மாகாண ஆளுநரின் அழைப்பை ஏற்று இலங்கை வரவுள்ள கேரள முதல்வர்

Date:

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரணாய் விஜயனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில், கேரளாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில்  சுற்றுலா அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் 1970ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள மலையக மக்கள் 1480 குடும்பங்கள்  கேரளாவில் மீள்குடியேற்றப்பட்டன.

இவர்கள் R.P.L( Rehabilitation Plantation limited) நிறுவனத்திலும், கேரளா வன அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திலும் தொழில்புரிகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிர்சசினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை  இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் பணிகளுக்கு கேரள முதல்வர் பிரணாய் விஜயன்வாழ்த்துக் கூறியதுடன், ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கு வருகைத் தருமாறு விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை வருவதாகவும் உறுதியளித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...