சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்!

Date:

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றார்.

சிங்கப்பூரின் 8-ஆவது ஜனாதிபதியும், முதல் பெண் ஜனாதிபதியுமான ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் போட்டியிட்டார். 66 வயதாகும் அவருடன், இங்கோக் சாங் (75) மற்றும் டான் கின் லியான் (75) ஆகிய சீனாவைப் பூர்விகமாகக் கொண்ட இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. தேர்தல் துறை வெளியிட்டுள்ள இறுதி முடிவுகளின்படி, மொத்தம் பதிவான 24.8 இலட்சம் வாக்குகளில் தர்மன் சண்முகரத்னம் 17.46 இலட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இங்கோக் சாங்குக்கு 15.7 சதவீத வாக்குகளும், டொன் கின் லியானுக்கு 13.88 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

அதையடுத்து, சிங்கப்பூரின் 9-ஆவது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் பொறுப்பேற்கிறார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...