ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் உண்மையில் என்ன நடந்தது என்பதை செனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் மூலம் நன்கு புரிந்துக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
செனல் 4 மூலம் வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
“ பார்க்கப் போனால் அன்று தெரிவித்ததை விட முற்றிலும் வேறான ஒரு விடயமே நடந்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நான்கு வருடங்களாக வழங்கக்கூடிய தொல்லைகள் அனைத்தும் வழங்கப்பட்டன. அதற்கான பல தீர்ப்புகளும் வழங்கப்பட்டன.
செனல் 4 தொடர்பிலான கடிதத் தயாரிப்பை நிறைவு செய்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதியை நான் சந்திப்பேன்.
ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின் படி, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை நானும் கோருகின்றேன்.” என தெரிவித்தார்.