ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் 12 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்றுள்ளனர்.
நான்கு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்க பல அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸுடன் ஜனாதிபதி பல தலைப்புகளில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
இதேவேளை, ‘பேர்லின் குளோபல் உரையாடலின்’ முதல் நாள் தலைவர்கள் கலந்துரையாடல் அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார்.