துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த தினத்தின் பின்னர் 2024 ஆம் ஆண்டிற்காக துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, 2024 / 2025 வருடங்களுக்கான தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவுகளைப் புதுப்பிக்கும் நடவடிக்கையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த தினத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பிப்பு நடவடிக்கைகளுக்கு தாமதக் கட்டணம் அறவிடப்படும் அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.