பறக்கும் விமானத்தில் 15 மாத பெண் குழந்தைக்கு மாரடைப்பு! உயிரிழந்த பரிதாபம்

Date:

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 15 மாத பெண் குழந்தைக்கு பறக்கும் விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்தியாவின் பெங்களூர் – புது டெல்லி இடையிலான விமானத்தில் குறித்த குழந்தை பெற்றோருடன் பயணித்தது.

அப்போது நடுவானில் குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அங்குள்ள மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூன்று நாட்களுக்கு பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது.

சிறுநீரக மற்றும் இதய செயலிழப்பு உட்பட பல சிக்கல்களால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலத்தை பங்களாதேஷுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் இறங்கியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...