கலை இலக்கிய துறையில் பல்வேறு விருதுகளை வென்றெடுத்துள்ள புத்தளம் கலைஞர், ஓய்வுபெற்ற ஆசிரியர், கலாவர்ணன் “எஸ்.எஸ்.எம். ரபீக் மாஸ்டர்” தனது ஐந்து புதிய படைப்புகளுக்கு முதலிடங்களை பெற்று சாதித்துள்ளார்.
புத்தளம் பிரதேச இலக்கிய விழாவுக்காக இவர் சமர்ப்பித்த கலை ஆக்கங்களில் பாடலாக்கம்- செய்யுள், முகப்புப் பாடலாக்கம், கவிதையாக்கம், சிறுகதை எழுதுதல், சிறுவர் கதை ஆக்கம் ஆகியவற்றிலேயே இவர் முதலிடங்களை பெற்றுள்ளார்.
இதற்கான பரிசளிப்பு விழா அண்மையில் (27) புத்தளம் பிரதேச செயலக “சுபாஷி” கேட்போர் அரங்கில் நடைபெற்றது.
புத்தளம் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர், கலாசார பிரிவு அதிகாரிகள், மத குருக்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
புத்தளம் பிரதேச காரியாலய கலாசாரப் பிரிவு அலுவலகர் தம்மிகா அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாக நின்று கடமையாற்றினார்.
(எம்.யூ.எம்.சனூன்)