பால்மா மீதான இறக்குமதி வரி ஒரு கிலோகிராமிற்கு 10 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோவிற்கு 10 வீதம் வரி அதிகரிக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த வரி அதிகரிப்பினால் உள்ளூர் சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த வரி அதிகரிப்பினால் எதிர்காலத்தில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.