பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்: ஜே.வி.பி அழுத்தம்

Date:

‘செனல் 4’ ஆவணப்படத்தில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் பிரகாரம், அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான, சுரேஷ் சலே மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ரணில் விக்ரமசிங்க விசாரணைகளை நடத்தி சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

ஜே.வி.பியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மிகத் தெளிவான தகவல்களை முன்வைத்து தாக்குதல் தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெரிவித்துள்ளோம்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட விதம் மற்றும் அது நடந்தவிதம் அதிகார பேராசையே என்பது மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல் என்பதை ‘செனல் 4’ வெளியிட்டுள்ள வீடியோ உறுதி செய்கிறது.

உயிர்த்த ஞாயிறு வேட்பாளர் ராஜபக்ஷர்கள் குழுவே, மலட்டு உடைகள், மலட்டு மருத்துவர்கள், மலட்டு உணவுகள் குறித்து போலி பிரசாரங்களை முன்னெடுத்தனர்.

தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தேசிய பாதுகாப்பை தன்னால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்று கூறியே ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதாக அறிவித்தார்.

இந்த குழுவுடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானும் தற்போதைய அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சுரேஸ் சலேவும் நேரடியான தொடர்புகளை கொண்டிருந்தமை மௌலானா செனல் 4 ஆவணப்படத்தின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.

உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் விசாரணைக்கான பணிப்புகளை மேற்கொள்ள வேண்டும்“ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...