தேசிய மகளிர் ஆணைக்குழு என்ற பெயரில் மற்றுமொரு சுதந்திர ஆணைக்குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பெண்களுக்கான உரிமை ஆண்/பெண் சமூக, சமத்துவம் தலைமைத்துவத்தில் ஆண் பெண் சமத்துவம் முதலான பிரச்சனைகள் தொடர்பான விடயங்களை இந்த ஆணைக் குழு கையாள இருப்பதுடன் இதற்கான தீர்மானத்தை விடயம் தொடர்பான அமைச்சர் நடவடிக்கை எடுக்க உள்ளார்.
இதற்கான சட்ட நகல்களை சட்ட வரைவு திணைக்களம் தயாரித்துள்ளது. மகளிர் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.