முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் மூன்றாம் நாள் அகழ்வு பணிகளின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பயன்படுத்தும் சில சான்றுப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் இலக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பெண் போராளிகளின் ஆடைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் இலக்கங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
மேலும் இன்று இரண்டு எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்பு கூடுகளுடன் பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மேலாடைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் உலோக பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.