மழையுடன் கூடிய வானிலை நிலவும்!

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

Re building Sri lanka திட்டத்திற்கு இதுவரை ரூ. 1893 மில்லியன் நிதி உதவி

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re...

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri...

தனது இரண்டாவது மின்சார ஸ்கூட்டரான Rizta வை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Ather Energy

ஸ்ரீ லங்கா மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் இந்தியாவின் முன்னணி மின்சார...