இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபியால்-அவ்வல் மாதத்தில் இன்றைய நாளில் சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நபிகள் நாயகம் பிறந்ததாக இஸ்லாம் கூறுகிறது.
அனைத்து மனிதகுலத்திற்கும் அன்பு மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்பிய இஸ்லாத்தின் சிறந்த ஆசிரியரான முஹம்மது நபி, அல்லாஹ்வின் கடைசி தூதர் என்று அறியப்படுகிறார்.
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை இஸ்லாமியர்கள் சிறப்பான நாளாகக் கருதுகிறார்கள்.
மரியாதைக்குரிய மனித நேயத்தைக் கட்டியெழுப்பத் தன்னை அர்ப்பணித்த நபி அவர்களின் பிறந்தநாளை இன்று உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதேவேளை, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் இன்று ஒளியேற்றப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.