ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு இழப்பீடு !

Date:

ஹொரப்பே புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த கம்பஹா மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் தினித் இந்துவர பெரேராவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாவை வழங்க ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வாறான விபத்து தொடர்பான இழப்பீடு வழங்குவதற்கான சட்டப் பின்னணி இல்லாத போதிலும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, இத்தொகை இன்று  உயிரிழந்த இளைஞரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...