ரஷ்யா இனப்படுகொலை செய்கிறது: ஐ.நா. பொது சபையில் ஜெலன்ஸ்கி ஆவேசம்!

Date:

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரானது தொடர்ந்து, ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். தூதரக அளவிலான அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. எனினும் போரானது நிற்காமல் தொடருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ரஷ்யாவில் உள்ள உக்ரைனிய குழந்தைகளை திரும்ப சொந்த நாட்டுக்கு கொண்டு வர நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஆனால், காலம் கடந்து செல்கிறது.

ரஷ்யாவில் உள்ள அந்த குழந்தைகளுக்கு உக்ரைனை வெறுக்கும்படி கூறப்படுகிறது. அவர்களுடைய குடும்பத்தினருடனான உறவுகள் முறிகின்றன. இது தெளிவாக ஒரு இனப்படுகொலை என்று பேசியுள்ளார்.

ரஷ்யாவுடன் பகைமை தொடர்ந்தபோதிலும், அமைதி திட்டம் பற்றி ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். அவர் கூட்டத்தொடரில் தொடர்ந்து பேசும்போது, நவீன வரலாற்றில் முதன்முறையாக, தாக்குதலுக்கு உள்ளான தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உண்மையில் ஒரு வாய்ப்பு எங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

சவுதி அரேபியா கடந்த மாதம் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், ரஷ்ய ஆக்கிரமிப்பால் மீறப்பட்ட, சர்வதேச விதிகளின் அடிப்படையிலான ஒழுங்குமுறையை மீட்டெடுப்பதற்கான அமைதி திட்டம் ஒன்றை நாங்கள் முன்மொழிகிறோம் என்று பேசினார். ஒற்றுமையே, இதுபோன்ற படையெடுப்புகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்யும் என்று அவர் பேசினார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...