சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம் செப்டெம்பர் 06 முதல் 16 வரையான காலப்பகுதியில் வலஸ்முல்ல மற்றும் காத்தான்குடி போன்ற நகரங்களில் கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தன்னார்வத் திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது.
சவூதியின் இரண்டு புனித புனிதத்தலங்களின் பாதுகாவலர், மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் அவர்களினதும் பட்டத்து இளவரசரும் சவூதி அரேபியாவின் பிரதமருமாகிய முகம்மத் பின் சல்மான் பின் அப்துல்அசீஸ் ஆல் ஸுஊத், அவர்களதும் பணிப்புரைகளுக்கு அமைய, உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் கஷ்டங்களைப் போக்க சவூதி அரேபியா மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையில், இந்த திட்டம் இடம்பெற்றது.
இத்திட்டத்தினூடாக பல ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பரிசோதித்தல், அவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, தேவைப்படுமிடத்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல் , தேவையான மருந்துகளை வழங்குதல், வெண்படலங்களை அகற்றுதல், கண்ணீர் குழாய்களில் ஏற்படும் தடுப்புக்களுக்குச் சிகிச்சையளித்தல், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், இத்திட்டத்தினூடாக சிகிச்சைக்காக வரும் அனைவருக்கும் சுகாதார விழிப்புணர்வும் அளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
- இத்திட்டங்களின் போது, சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளர்கள் விபரம் கீழ் வருமாறு:
.தென்னிலங்கையில் உள்ள ‘வலஸ்முல்லா’ நகரம்:
.மருத்துவ பரிசோதனைகள்: 3500
.மூக்குக் கண்ணாடி விநியோகம்: 1050
.அறுவை சிகிச்சைகள்: 531 - கிழக்கு இலங்கையிலுள்ள காத்தான்குடி நகரம்:
.மருத்துவ பரிசோதனைகள்: 3500
.மூக்குக் கண்ணாடி விநியோகம்: 1000
.அறுவை சிகிச்சைகள்: 525