வெலிகம சம்பவத்தை வஹ்ஹாபிய தீவிரவாதமாகக் காட்ட சிங்கள ஊடகம் முனைப்பு

Date:

வெலிகம கல்பொக்க புஹாரி ஜும்ஆப் பள்ளிவாசலில் கடந்த வெள்ளியன்று (15) ஜும்ஆத் தொழுகையின் பின் நடைபெற்ற கைகலப்பினை வஹ்ஹாபிய தீவிரவாதப் பிரச்சினையாகச் சித்திரிக்கும் வகையில் சிங்கள ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெலிகாமம் கல்பொக்கையில் மாப்பிள்ளை ஆலிம் (ரஹ்) அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட மத்ரஸாவுக்குப் பக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புஹாரி பள்ளிவாசலிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அரூஸியதுல் காதிரியா தரீக்காவைச் சேர்ந்தவர்களதும் தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களதும் செயற்பாடுகள் இந்தப் பள்ளிவாசலில் ஒன்றாக நடைபெற்று வந்துள்ளன.

இந்த நிலையில் கடந்த வாரம் இந்தியாவில் இருந்து வருகை தந்த உலமா ஒருவர் நடத்திய குத்பா பிரசங்கத்துக்குப் பின்னர் அறிவித்தல் வாசிப்பதில் எழுந்த பிரச்சினையினால் குறித்த இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதங்கள் எழுந்து கைகலப்பாக மாறியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வெலிகம பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பிரதாய முஸ்லிம்களுக்கும் வஹாப்வாதிகளுக்கும் இடையிலான பிரச்சினையாக இதனை ஊதிப் பெருப்பிக்கும் வேலையை சிங்கள ஊடகமொன்று முன்னெடுத்து வருவது குறித்து முஸ்லிம் சமூகத்தில் அதிருப்திகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று திவயின பத்திரிகையில்…..

 

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...